கொரோனா உயிரிழப்பு  குறைவாக உள்ளது – அரசு மருத்துவமனை டீன்

கோவையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போர் விகிதம் குறைவாக உள்ளதாகவும், தாமதாமன சிகிச்சையே உயிரிழப்பு ஏற்படுவதற்கு காரணமாகிறது எனவும் கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா இன்று (19.4.2021)தெரிவித்துள்ளார்.

கோவையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று மட்டும் 727 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், கோவையில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் விகிதம் குறைவாக உள்ளதாக அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன்  கூறியதாவது:

கொரோனா பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் சிலர், நோய்த் தொற்றின் தீவிரத்தால் உயிரிழக்கின்றனர். ஒரு சிலர் அனுமதிக்கப்பட்ட, 24 மணி நேரத்தில் உயிரிழக்கின்றனர். 50 சதவீத உயிரிழப்புகளுக்கு, தாமதமாக சிகிச்சைக்கு வருவதே காரணம்.

காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, தலைவலி, வாந்தி ஆகிய அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதியானால், உயிரிழப்பை தவிர்க்கலாம் எனவும், கோவையில் உயிரிழப்பு விகிதம் குறைவாகவே உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும், உடனடி சிக்கிச்சையின் மூலம், உயிரிழப்பை முற்றிலும் கட்டுப்படுத்தலாம்  எனக் கூறினார்