கல்லீரல் குறைபாட்டிற்கு துல்லியமான சிகிச்சையை அளிக்கும் அதிநவீன  பைபிரோஸ்கேன் இயந்திரம் அறிமுகம்

ராமநாதபுரம் பகுதியில் உள்ள, விஜிஎம் மருத்துவமனையில், உலகதரம் வாய்ந்த, புதிய கல்லீரலில் உள்ள குறைகளை கண்டறியும் அதிநவீன  பைபிரோஸ்கேன் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஏப்ரல் 19 ம்தேதி உலக கல்லீரல் தினமாக உலகமெங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளை கொண்டாடும் வகையிலும், பொதுமக்களுக்கு கல்லீரல் குறித்தான துல்லியமான சிகிச்சையை அளிக்கும் வகையிலும், கோவை விஜிஎம் மருத்துவமனையில், புதிய அதிநவீன  பைபிரோஸ்கேன் என்ற கருவியை  அறிமுகம் செய்து அதன்  துவக்க  விழா நிகழ்ச்சி  மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் தியாகராஜன் இதனை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து அதன் செயல்பாடுகள் குறித்து பேசினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜிஎம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மோகன் பிரசாத் கூறுகையில், கல்லீரல் குறித்த அனைத்து தகவல்களையும் ஒரு நொடியில் கண்டறியும், இந்த பைபிரோஸ்கேன் என்ற கருவி,  இந்தியாவிலேயே மூன்று இடங்களில் மட்டுமே உள்ளது. பஞ்சாப், மும்பையில் இரண்டு இயந்திரங்களும், தமிழகத்தில் கோவையில் நமது மருத்துவமனையில் மூன்றாவதாக உள்ளது எனவும், உலக தரத்தில், முதன் முறையாக, ஒரு விநாடியில் 200 மடங்கு வேகத்தில் செயல்படும் இந்த இயந்திரம் மூலமாக கல்லீரலின்  கெட்டி தன்மை, கல்லீரல் சுற்றியும் உள்ள கொழுப்பு போன்ற பல்வேறு தகவல்களையும் உடனுக்குடன் தெரிவிக்கும் வல்லமை கொண்டது எனவும்,  கல்லீரலில் உள்ள கொழுப்பின் அளவு, அதன் பாதிப்புகளையும் துள்ளியமாக கண்டறிந்து செயல்பட கூடியது எனவும் தெரிவித்தார்.

தற்போதைய மக்கள், 70 விழுக்காடு கல்லீரல் சேதமடைந்த பின்னர் தான்  மருத்துவமனைக்கு வருகின்றனர் எனவும், 70 % சேதமடைந்ததால் அதனை மாற்று அறுவை சிகிச்சை மூலமாக மட்டுமே  காப்பாற்ற முடியும் எனவும், தற்போதைய உலகில் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம், உடல் பருமன் போன்ற பல்வேறு  காரணமாக கல்லீரல் பாதிக்கப்படும் எனவும், இந்த சிகிச்சை மூலமாக உடனடியாக அறிமுக நிலையிலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்க முடியும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் விஜிஎம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மோகன் பிரசாத், மருத்துவர் மதுரா பிரசாத், மருத்துவர்  சுமன் பிரசாத் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.