பொதுநிகழ்ச்சிகளில் 50% பேருக்கு அனுமதி வழங்க தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர் அசோசியேஷன் கோரிக்கை

கொரோனா பொது முடக்கத்தால் தமிழகம் முழுவதும் உள்ள ஒளி,ஒலி, ஜெனரேட்டர், பந்தல், சாமியானா, பர்னிச்சர், சமையல் பாத்திரங்கள், மேடை அலங்காரம், மணவரை அலங்காரம், கேட்டரிங் , ஈவென்ட் மேனேஜர்ஸ், இசைக் கலைஞர்கள், வீடியோ, போட்டோகிராபர்ஸ், நடன கலைஞர்கள் ஆகியோரின் தொழில்கள் பாதிக்கப்படுவதால் திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் 50% பேர் கலந்துகொள்ள அனுமதி வழங்க கோரி தமிழக அரசுக்கு தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக, தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன், தொழில்சாலைகள், சினிமா தியேட்டர்கள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும் 50 சதவிகித கொள்ளளவுடன் இயங்கலாம் என அறிவித்துள்ளது. இதைபோல் திருமணம் உள்ளிட்ட பொதுநிகழ்ச்சிகளிலும் 50 சதவிகித நபர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்க கோரி சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக அரசு அனுமதி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.