இந்துஸ்தான் கலைக் கல்லூரியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

கோவை மாவட்ட கராத்தே ஆசோஸியேஷன் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே போட்டி இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்துஸ்தான் கல்லூரியில், கோவை மாவட்ட கராத்தே கழகம் மற்றும் இந்துஸ்தான் கல்லூரியின் உடற்பயிற்சி துறையும் இணைந்து நடத்திய 30 வது மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் 300கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் பங்கேற்றனர். இதில் தனிநபர் மற்றும் குழுபோட்டியாக மாணவ, மாணவிகள் 5 வயது சிறுவர்கள் முதல் பல்வேறு வயது பிரிவினர் போட்டிகளில் பங்கேற்றனர். இப்போட்டியில் கலந்துகொண்ட அனைத்து வீரர்களுக்கும் பங்கேற்பு சான்றிதல்கள் வழங்கப்பட்து. மேலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதல்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. குழுப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ளனர். மேலும் இப்போட்டிகள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சென்சாயி. மனோகரன் (சேர்மேன் – சி.கே.ஏ)   இயக்குனர் –டெக்னிக்கல் சென்சாயி.சாரங்கதாரன், செயலாளர் சென்சாயி.பாலசுப்ரமணியன், செக்ரட்டரி அட்மின் சென்சாயி.சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியை இந்துஸ்தான் கல்வி நிறுவங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா சதீஸ்பிரபு ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். இதில் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, கோவை மாவட்ட கராத்தே கழகத்தின்  தலைவர் சென்சாயி. முத்துராஜு ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போட்டிகளை உடற்கல்வி இயக்குனர் கருணாநிதி மற்றும் கணினி துறைத்தலைவர் சென்சாயி. ரங்கராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.