தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் என்.எஸ்.எஸ் மாணவர்கள்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் என்.எஸ்.எஸ் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி குறித்தான விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டது.

இக்கல்லூரியின் என்.எஸ்.எஸ் மாணவர்கள் மாநகரில் அதிகமாக மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளான ஒண்டிப்புதூர், ராமநாதபுரம், துடியலூர், வேடப்பட்டி, வடவள்ளி, கணியூர், கருமத்தம்பட்டி போன்ற பகுதிகளில்  கொரோனா தடுப்பூசியின் அவசியத்தையும், முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவை குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு  ஏற்படுத்தினர்.

என்.எஸ்.எஸ் மாணவர்கள் கோவை மட்டுமல்லாது நீலகிரி, திருச்சி, திருவாரூர், நெய்வேலி போன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்கள் கல்லூரிக்கு வராமல் ஆன்லைனில் கல்விகற்கும் சூழலிலும் சமூகப் பொறுப்புணர்ந்து இத்தகைய விழிப்புணர்வு நிகழ்வுகளில் ஈடுபடுவதைக் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் பாராட்டி வாழ்த்தினார். இம்மாணவர்களை என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர்கள் பிரகதீஷ்வரன், சுபாஷினி, நாகராஜன் ஆகியோர் ஊக்கப்படுத்தினர்.