அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிக்கு தடை

அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களில் சிலருக்கு  ரத்த உறைவு உள்ளிட்ட தீவிர பக்க விளைவுகள்  ஏற்பட்டதால் அந்த தடுப்பூசியை பயன்படுத்த டென்மார்க் நாடு தடை விதித்துள்ளது.

இந்த தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் பிரிட்டிஷ் – சுவேடனின் அஸ்ட்ராசெனெகா  பன்னாட்டு நிறுவனம் இணைந்து தயாரித்தது.

உலகளவில் பல நாடுகளில் தற்போது அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது.

டென்மார்க்கில் இத்தடுப்பூசியை எடுத்துக் கொண்ட சிலருக்கு ரத்த நாளங்களில் ரத்த உறைவு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது போன்ற காரணங்கள் தொடர்ந்து எழுந்தவண்ணமே இருந்ததால் தடுப்பூசியை டென்மார்க் தடை செய்துள்ளது.

ஐரோப்பாவின் முதல் நாடாக டென்மார்க் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை தடை செய்து   உள்ளது.

இது போன்ற பிரச்சனைகள் அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, நெதர்லாந்து, ஸ்பெயின், சுவீடன் உள்ளிட்ட நாடுகளிலும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியால் இருந்துள்ளது. இதனால் இந்நாடுகளிலும் இந்த தடுப்பூசி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், இத்தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் பயன்கள் குறித்து ஐரோப்பிய மருத்துவ முகமை, அறிவுறுத்தி வந்ததை தொடர்ந்து இந்த நாடுகளில் நிறுத்திவக்கப்பட்டிருந்த அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.