இரவு நேர ஊரடங்கு கொரோனா தொற்றை கட்டுப்படுத்துமா?

தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நாளை (15.4.2021) நடைபெற உள்ளது.

பெருகி வரும் கொரோனா பெருந்தொற்றல் நேற்று மட்டும் 7,819 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா அலை வேகமாக வீசி வரும் மாவட்டங்களாக சென்னை, செங்கல்பட்டு, கோவை,திருச்சி,மதுரை,திருவள்ளூர், காஞ்சிபுரம்  உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு அதிகம் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தற்போது கொரோனா பரிசோதனைகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை தனிமை படுத்துதல், அதிகளவிலான சிகிச்சை முகாம்கள், தடுப்பூசி பணிகளை தூரிதப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

இருப்பினும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்தால் மட்டுமே பரவலை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவ தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை  கூட்டத்தில் சுகாதார செயலர், வருவாய்த்துறை ஆணையர், மருத்துவ நிபுணர் குழு,காவல் துறை உயர் அதிகாரிகள், உள்துறை செயலர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.