கோவையில் 317 மி.மீ. மழை பதிவு

கோவை மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக அவ்வப்போது லேசான மழை பெய்து வந்த நிலையில்  நேற்று மதியம் மிதமான மழை பெய்ததை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் கனமழை பெய்தது. மேலும் கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவை பேரிடர் மேலாண்மைத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையின் படி, அன்னூரில் 23 மில்லி மீட்டரும், கோவை விமான நிலையத்தில் 15.4 மில்லி மீட்டரும், சின்கோனா (வால்பாறை) 40 மில்லி மீட்டரும், சின்னக்கல்லாரில் 33 மில்லி மீட்டரும், வால்பாறை பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் பகுதிகளில் 26 மில்லி மீட்டரும், வால்பாறை தாலுகாவில் 25 மில்லி மீட்டரும், சோலையாரில் 5 மில்லி மீட்டரும், ஆழியாரில் 67.6 மில்லி மீட்டரும், சூலூரில் 39 மில்லி மீட்டரும், கோவை தெற்கில் 18 மில்லி மீட்டரும், பெரியநாயக்கன் பாளையத்தில் 2 மில்லி மீட்டரும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கோவையில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 317 மில்லி மீட்டர்மழை பதிவாகியுள்ளது.  சராசரி மழை அளவாக 22.64 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.