பாரதியார் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

 

பாரதியார் பல்கலைக்கழகத்தில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு துணைவேந்தர் பெ. காளிராஜ், பதிவாளர் க. முருகன், எஸ்சி/எஸ்டி சங்க தலைவர் இளஞ்செழியன், செயலாளர் செல்வன் மற்றும் பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதையை செலுத்தினர்.

மேலும் பல்கலைக்கழக ஆட்சிக்குழு  கூட அரங்கில் நடந்த விழாவில் துணைவேந்தர் ‘சமத்துவ நாள்’ என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். இதில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பற்றி அனைத்து சமூக மக்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள்மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பெயரில்  இருக்கை உருவாக்கி செயல்படுத்தப்படும் என  தெரிவித்தார்.