கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் ஒரு இடங்களில் பரவலாக மழை பெய்து வந்தது மக்களிடையே சற்று ஆறுதலைஅளித்தது. தற்பொழுது குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது  என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, திருநெல்வேலி, தருமபுரி, சேலம், கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.