கொரோனாவிற்கு மேலும் ஒரு தடுப்பூசி

இந்தியாவில் கொரோனாவிற்க்கான இரண்டு தடுப்பூசிகள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

கோவிஷில்டு  மற்றும் கோவாக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளும் தற்போது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷில்டு தடுப்பூசியை சீரம் நிறுவனமும், கோவாக்ஸின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனமும் தயாரிக்கிறது.

இவ்விரு தடுப்பூசிகளும் ஜனவரி 16 ல் பயன்பாட்டுக்கு வந்தது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு மட்டும் போடப்பட்டு வந்தது.பின்னர் 60 வயது மேற்பட்டவர்களுக்கும், 45 வயதை தாண்டிய இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிறகு 45 வயதை தாண்டிய அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த மத்திய நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. . கொரோனவிற்க்காக உலகிலேயே முதலாக பதிவு செய்யப்பட்ட தடுப்பூசி இது தான். இத்தடுப்பூசி 92% கொரோனவிலிருந்து காக்கும் திறனுடைது என ரஷ்யா தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தடுப்பூசியை மத்திய அரசு அங்கீரிக்கும் பட்சத்தில் மக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வரப்படும்.