“உ.வே.சா வும் கலைகளும்” எனும் தலைப்பில் கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் ஸ்கூல் ஆப் லிபெரல் தாட்ஸ் (SCHOOL OF LIBERAL ARTS) தமிழ்த் துறையின் சார்பில் “உ.வே.சா வும் கலைகளும்” என்ற தலைப்பில்  இணையவழி கருத்தரங்கம் (12.04.2021) நடைபெற்றது.

நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி அரசு கலைக்கல்லூரியின் தமிழாய்வுத் துறை பேராசிரியை பகவத் கீதா  கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.

அவர் தம் உரையில், ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் முறையே அறிமுகம் செய்து கலைகளின் வழி நம்முடைய வாழ்க்கை எவ்வாறு ஒன்றியிருக்கின்றது என்பதை  விளக்கினார். மேலும் தமிழர்களின் தொன்மைக் கலைகளாக விளங்கும் கட்டிடம், சிற்பம், இசை, ஓவியம், கூத்து, பரதம், உள்ளிட்ட கலைகளின் வளர்ச்சி குறித்தும் எடுத்துரைத்தார்.

திருக்கோயில்கள் பண்பாட்டை வளர்க்கும் கலைக்கூடமாக விளங்குவதை எடுத்துக்கூறி திருமுறை அருளாளர்கள், ஆழ்வார்கள், அரசர்கள் ஆகியோர் கலைகளை போற்றி வளர்த்த பாங்கை  எடுத்துரைத்து நிறைவு செய்தார்.