கோவையில் 5K கார் கேரின் 64வது கிளை திறப்பு

கோவை சிங்காநல்லூர் சாலையில் 5கே கார் கேர் தனது 64வது கிளையை இன்று (10.4.2021) திறந்துள்ளது. நடிகர் ரியோ மற்றும் 5 கே கார் கேர்   நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி கார்த்திக் குமார் சின்னராஜ் ஆகியோர் ரிப்பன்   வெட்டி தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து நடிகர் ரியோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர், மே 1 ஒன்றுக்குள் ஒரு லட்சம் கார்களுக்கு சனிடைசர் செய்து கொரோனாவில் இருந்து பாதுகாப்பு தருவது என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும், மேலும், 2000 இளைஞர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பதை ஊக்குவிக்கும் வகையில் இவர்களுடன் நான் பயணிக்கிறேன் எனக்கூறினார். இந்த ஆண்டுக்குள் 100 கிளைகளை தொடங்க இருக்கிறார்கள். இதனால் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான விசயம் என்றார்.

தொடர்ந்து சைக்கிள் கார் கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி கார்த்திக்குமார் சின்னராஜ் கூறுகையில்: 2012 முதல் 5 கே கார் கேர் 64 கிளைகளுடன், 12 லட்சம் வாடிக்கையாளர்கள், இரண்டாயிரம் பணியாளர்களுடன் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் வெற்றிகரமாக கார் சர்வீஸ்களை  அளித்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.