காவேரி மருத்துவமனைகளில் கல்லீரல் நோய்களுக்கான சிறப்பு மையம் துவக்கம்

கோவை, காவேரி மருத்துவமனைகளில் கல்லீரல் நோய்களுக்கான மற்றும் உறுப்பு மாற்றுக்கான மையங்களைத் தொடங்கியிருக்கிறது. இதில் நவீன கல்லீரல் சிகிச்சைப் பிரிவுகள், பிரத்யேக தீவிர சிகிச்சைப்பிரிவு (அறுவைசிகிச்சை அரங்குகள்) மற்றும் அறுவைசிகிச்சைக்குப் பிறகு மீண்டு குணமடைவதற்கான சிகிச்சைப் பிரிவுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். நோயறிதல், சிகிச்சை, உறுப்புமாற்று சிகிச்சை, அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு ஆகியவை உட்பட 360-டிகிரி பராமரிப்பையும் இம்மையங்கள் வழங்கும்.

காவேரி மருத்துவமனைகளில் அமைந்துள்ள இந்த உயர்மேன்மை மையங்கள், உயிருள்ள 6 நபர்களிடமிருந்து பெறப்பட்ட கல்லீரல்களைக் கொண்டு, கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சைகளை சமீபத்தில் வெற்றிகரமாக செய்திருக்கிறது. கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட 56 வயதுள்ள நபர் 8 மாதங்களாக அதற்கான சிகிச்சையை அவர் எடுத்து வந்தார். அவருக்கு உறுப்புமாற்று செய்வது அவசரமாகத் தேவைப்பட்டது. சிறுநீரக செயலிழப்பின் காரணமாகவும், சிறுநீர் வெளியேறாமல் உடலில் தக்கவைப்பின் காரணமாகவும் அறுவைசிகிச்சைக்கு முன்பு 36 மணி நேரங்கள் வரை டயாலிசிஸ் சிகிச்சையின் கீழ் இந்நோயாளி வைக்கப்பட்டார். பின்னர், அவரது மகளால் தானமாக வழங்கப்பட்ட கல்லீரலின் ஒரு பகுதியை கொண்டு கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டது. என்று காவேரி மருத்துவமனையின் கல்லீரல் நோய்கள், உறுப்புமாற்று மற்றும் கல்லீரல் கணைய அறுவைசிகிச்சைத் துறையின் தலைவர் டாக்டர் கே.இளங்குமரன் விளக்கமளித்தார். மற்றொரு நோயாளிக்கு அவரது மனைவியிடமிருந்து தானமாக பெறப்பட்ட கல்லீரலைக் கொண்டு உறுப்புமாற்று சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் ஒரு நோயாளிக்கு அவரது வாழ்க்கைத்துணைவி கல்லீரலை தானமாக வழங்கினார்.

இது குறித்து டாக்டர். இளங்குமரன் பேசுகையில், மேற்கூறப்பட்ட மூன்று நபர்களும், கல்லீரலை தானமாக வழங்கியவர்களும் மற்றும் கல்லீரலை தானமாகப் பெற்ற நோயாளிகளும் நன்றாக குணமடைந்து மீண்டிருக்கின்றனர். அவர்களது வழக்கமான வாழ்க்கையை மீண்டும் வாழத்தொடங்கியிருக்கின்றனர் என்று குறிப்பிட்டார்.

இச்சிகிச்சையைப் பெறும் நோயாளிகள் பாதிப்பிலிருந்து மீண்டு, இயல்பான மற்றும் சிறப்பான வாழ்க்கையை நடத்தத் தொடங்குகின்றனர்.  எனினும், தானமாக கிடைக்கும் உறுப்புகள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால், கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை கண்டிப்பாக அவசியப்படுகின்ற பல நோயாளிகளுக்கு உறுப்புமாற்று சிகிச்சை  நிகழ்வதில்லை.  பொதுமக்கள் மத்தியில் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததும் இதற்கு காரணமாகும்.  உயிருள்ள தானமளிப்பவர்களிடமிருந்து பெறப்படும் கல்லீரலைக் கொண்டு செய்யப்படும் உறுப்புமாற்று சிகிச்சை மிகவும் பாதுகாப்பானவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.  நோயாளிகளுக்கு தானமளிப்பவர்கள் பெரும்பாலும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், தானம் பெறுபவருக்கு பொருத்தமான கல்லீரலை கண்டறிவதற்கான சாத்தியம் மிக அதிகமாக இருக்கிறது, என்று அவர் மேலும் கூறினார்.

கல்லீரல் நோய்கள் மற்றும் உறுப்புமாற்று சிகிச்சை மையம் குறித்து பேசிய காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ், கல்லீரல் அறுவைசிகிச்சைக்கும், கல்லீரல் நோய்களை கண்டறிதல் மற்றும் பராமரிப்பிற்கு உயர் அளவிலான நவீன சாதனங்கள் அவசியமாக இருக்கின்றன. அத்துடன், தொற்று ஏற்படாமல் தவிர்க்க கண்டிப்பான நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவது அவசியம்.  சிறப்பான தகுதிபெற்ற மருத்துவர்கள் மற்றும் அறுவைசிகிச்சைகள் அடங்கிய ஒரு பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய வல்லுனர்களின் ஒருமித்த அணுகுமுறை கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சைக்கு அவசியமாக இருக்கிறது. சர்வதேச தரநிலைகளுக்கு நிகரான எமது உறுப்பு மாற்று சிகிச்சை மையங்கள், கல்லீரல் செயலிழப்பினால் அவதியுறும் பல நோயாளிகள் அவர்களது இயல்பான வாழ்க்கையை மீண்டும் பெறுவதற்கு நிச்சயமாக உதவும். உயிருள்ள தானமளிப்பவரிடமிருந்து பெறப்படும் உறுப்பைக் கொண்டு செய்யப்படும் உறுப்புமாற்று சிகிச்சை குறித்து அதிக விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது, இந்தியாவில் உறுப்புகளுக்கான தேவையை எதிர்கொள்வதற்கு போதுமான பங்களிப்பை வழங்கும், என்று தனது நம்பிக்கையைத் தெரிவித்தார்.