சித்திரை மாத துவக்கத்தை முன்னிட்டு பிக் பஜாரில் அதிரடி சலுகை !

கோவை பிக் பஜாரில் சித்திரை மாத துவக்கத்தை முன்னிட்டு அதிரடி சலுகை விற்பனை துவங்கியுள்ளது. 2500 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் 500 ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் மற்றும் பழங்களை இலவசமாக வாங்கலாம்.

ஆண்டுதோறும் பல்வேறு சிறப்பு தினங்களை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பியூச்சர் குரூப் குழுமத்தின் முதன்மை ஹைப்பர் மார்க்கெட்டான பிக் பஜாரில் சிறப்பு ஆஃபர் விற்பனைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இக்குழுமத்தில் முதன்முறையாக சித்திரை மாத துவக்க விற்பனை சலுகையாக எல்லாவற்றிலும் மிகப்பெரிய சலுகை எனும் விற்பனை துவங்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பிக்பஜாரில், வாடிக்கையாளர்கள் 2500 ரூபாய்க்கு எந்த விதமான பொருட்கள் வாங்கினாலும், ரூபாய் 500 மதிப்புள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை அதாவது தமிழ் வருடம் சித்திரை ஒன்றாம் தேதி வரை இந்த சலுகை விற்பனை நடைபெற உள்ளதாக கோவை பிக் பஜாரின் பொது மேலாளர் ராஜ் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது வரை இது போன்ற சலுகை விற்பனை முதன் முறையாக அறிமுகபடுத்தி இருப்பதாகவும், இந்த சலுகை விற்பனைக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறிய அவர், சலுகை விற்பனை மட்டுமின்றி,கோடைகால ஆடை விற்பனை, மளிகை பொருட்கள், டி.வி., ஏர்கண்டிசன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களிலும் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் உணவு மற்றும் பேஷன் பொருட்கள், வீட்டு அலங்காரம், ஹோம் பர்னிச்சர், சமையல் பொருட்கள் மற்றும் தினசரி அத்தியாவசிய பொருட்களில் மாபெரும் தள்ளுபடியை வழங்குவதாக அவர் தெரிவித்தார். கோவையில் இது போன்ற தள்ளுபடி வேறு எங்கும் இல்லாததால் கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொது மக்கள் பிக் பஜாரில் குவிந்து வருவது குறிப்பிடதக்கது.