தேர்தல் பணிக்காக வந்த துணை ராணுவப்படையினர் ஊர் திரும்பினர்

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு வட மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை வீரர்கள், நேற்று (07.04.2021)இரவு ரயில் மூலம் சொந்த ஊர் சென்றனர்.

துணை ராணுவப்படையினர் 891 பதட்டமான வாக்குச்சாவடிகள் உட்பட பல்வேறு ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றினர்.

ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில் நேற்று இரவு ரயில் மூலம் சொந்த ஊர் சென்றனர்.துணை ராணுவத்தினர் ஓட்டுப்பதிவு பெட்டிகளை வாகனங்களில் ஏற்றி எண்ணிக்கை மையம் கொண்டு செலுத்துதல், பதட்ட பகுதியில் கூட்டம் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

போலீசார் பற்றாக்குறை இருந்த நிலையில் துணை ராணுவத்தினர் வருகையால் கோவையில் பதட்டமான சூழல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது குறிப்பிடத்தக்கது.