போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மாணவர்கள் மீள்வதற்கான வழிகள்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில், “போதைபொருள் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மூன்று நாள் திறன் திட்டம்” நடைபெற்று வருகிறது. இன்று (17.01.18) தொடங்கிய இக்கருத்தரங்கு ஜனவரி 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், குழந்தைகள் போதைப்பொருள் பழக்கத்தை எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள், அதனால் ஏற்படும் விளைவுகள், இக்கொடிய பழக்கத்திலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குறித்து விளக்கமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கோவை மருத்துவக் கல்லூரியின் இணை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டார். இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணைய்யன் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் சின்னதுரை வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் நிறைவு விழா 19.01.18 அன்று நடைபெறவுள்ளது.