கமல்ஹாசன் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்துடன் ஓர் சந்திப்பு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் கமல்ஹாசன் இன்று லயன்ஸ் கிளப்-ல் கோவை மாவட்ட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மற்றும் பெண்ணியம் அமைப்பு உறுப்பினர்களை நேரில் சந்தித்தார்.

அப்போது கமல்ஹாசனை மாற்றுத்திறனாளிகள் கட்டிப்பிடித்து தங்கள் அன்பினையும் மகிழ்ச்சியினையும் வெளிப்படுத்தினர். மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கான செயல் திட்டங்கள் அடங்கிய கோரிக்கை பட்டியலை நலச்சங்க உறுப்பினர்கள் கமல்ஹாசனிடம் அளித்தனர். கமல்ஹாசன், மாற்றத்திற்கான திறனாளிகளான உங்களுக்கு உரிமைகள் கிடைத்திட, தேவைகள் நிறைவேற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.