வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் பையா கிருஷ்ணன் முதல் வாக்காளர் ஆன இளம் பெண்ணின் கையில் முத்தமிட்டு திமுக விற்கு வாக்களிக்க கோரியதுடன் திமுக ஆட்சி அமைந்தவுடன் வேலைக்கு ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பையா கிருஷ்ணன் அத்தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் வெள்ளிகிழமை (2.4.2021) வீதி வீதியாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து வீடு வீடாக சென்று திமுகவிற்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொண்ட பையா கிருஷ்ணன் சிறுவர்-சிறுமிகளை கொஞ்சி மகிழ்ந்து ஆதரவு திரட்டினார். மேலும், ஒரு வீட்டில் இருந்த முதல் வாக்காளரான கல்லூரி மாணவி ஒருவரை பார்த்து யாருக்கு வாக்களிப்பாய் எனக் கேட்டார்.

அப்போது அந்த மாணவி உங்களுக்கு தான் ஐயா எனது வாக்கு என்று கூறியவுடன் மகிழ்ச்சி அடைந்து அந்த மாணவியின் கையை பிடித்து முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் திமுக ஆட்சி அமைந்தவுடன் அரசு வேலைக்கு ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார். தொடர்ந்து ஒவ்வொரு வீடாக ஏறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.