100 சதவித வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம்

ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் சார்பில் 100 சதவித வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று (31-03-2021)  நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கர்னல் LCS நாயுடு, மேஜர் தினேஷ் டேவிஸ் மற்றும் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி கலந்து கொண்டு பிரச்சார வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

கல்லூரி முதல்வர் பொன்னுசாமி பேசுகையில்: வாக்காளிப்பது நமது உரிமை மட்டும் அல்ல நமது கடைமை எனவே அனைவரும் தவறாமல் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வினை ஊக்குவிக்கும் விதமாக ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் மற்றும் பிரியா சதிஸ்பாபு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.