அனைவருக்குமான வளர்ச்சி நமது தாரக மந்திரம் – உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்  

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து தேர்நிலைத் திடலில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (31.3.2021)பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

மேற்குவங்கம், அஸ்சாம், கேரளாவில்   நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில்   கலந்து கொண்டதாகவும்,

அங்கு பா.ஜ.க   எந்த சந்தேகமும் இல்லாமல் வெற்றிபெறும் வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

அனைவருக்குமான வளர்ச்சி என்பது நமது தாரக மந்திரம். தமிழகத்தில் இந்த கூட்டணி புதிய விடியலை நோக்கி செல்கிறது. தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கியுள்ள மோடியை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

பிரதமர் மோடி பல திட்டங்களை 6 ஆண்டுகளில் வழங்கியுள்ளார். இலவச கேஸ், வீடு, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளார்.   மேலும் விவசாயிகள் முன்னேற்றத்திற்கு 6 ஆயிரம் ரூபாயை நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கிற்கு செல்லுத்தும் திட்டத்தை பிரதமர் அறிவித்துள்ளார்.

வரும் தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெற்றால் இன்னும் அதிக நிதி கிடைக்கும். வானதி வெற்றி பெற்றால் மத்திய அரசின் திட்டங்களையும், நிதியையும் கோவைக்கு கொண்டுவருவார்.

தமிழகம் பெண்களுக்கு அதிகாரத்தில் முக்கியத்துவம்  கொடுக்கும் மற்றும் பெண்களுக்கு மரியாதை செலுத்தும் மண் எனவும், பெண் குழந்தைகளுக்கும், மகளிருக்கான முன்னேற்றத்தை நம் கூட்டணியால் மட்டும் தான் தர   முடியும் என கூறினார்.