வானதி சீனிவாசனை ஆதரித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம்

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து   உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று (31.3.2021) கோவை வந்தார்.

தொடர்ந்து அவர் கோவை புளியகுளம் விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து தனது முதல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

இதைத் தொடர்ந்து 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக பாஜக கூட்டணி கட்சியினர் வாகன பேரணி நடைபெற்றது. புளியகுளம் பகுதியில் துவங்கிய வாகன பேரணி ராமநாதபுரம், சுங்கம், உக்கடம் வழியாக சென்று தேர்நிலை திடலை வந்தடைந்து.

இதில் பாஜக வானதி சீனிவாசன் ஆதர்த்து தாமரை சின்னத்தில் வாக்களிக்கும் படி பிரச்சாரம் மேற்கொண்டு சென்றனர். தொடர்ந்து உத்திரபிரதேச முதல்வர் பொதுக்கூட்டத்தில் கலந்து உரையாடினார்.