கோவையில் 200-யை தாண்டிய கொரோனா தொற்று..!

கோவை மாவட்டத்தில் 3 மாதங்களுக்குப் பின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 200க்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில், நேற்று(30.3.2021) மேலும் 207 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையைச் சேர்ந்த 207 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 679ஆக அதிகரித்துள்ளது. தவிர தொற்று பாதிப்புக்கு உள்ளாகி  2 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 109 போ் குணமடைந்து (30.3.2021வீடு திரும்பினர். மேலும் இதுவரை 56 ஆயிரத்து 599 போ் குணமடைந்துள்ளனர். தற்போது 1,291 போ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.