கோவையில் ரூ.17.63 லட்சம் பறிமுதல் 

பறக்கும்படை சோதனையில் கோவையில் நேற்று (30.3.2021) ஒரே நாளில் ரூ.17.63 லட்சம் பணம் மற்றும் காலண்டர்களை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்கும் விதமாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவையில் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வரும் சூழலில், நேற்று ஒரே நாளில் ரூ.17 லட்சத்து 63 ஆயிரத்து 950 ரொக்கம் மற்றும் விளாங்குறிச்சி பகுதியில்   இருந்து 300 திமுக காலண்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.