அறிவுசார் காப்புரிமை குறித்த பயிலரங்கம்

பாரதியார் பல்கலைக்கழகத்தின் அறிவுசார் காப்புரிமை மையம் மற்றும் நிறுவன கண்டுபிடிப்பு கவுன்சில் சார்பில்” அறிவுசார் காப்புரிமை சட்டம் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கான அறிவு சார் சொத்து மேலாண்மை” என்ற தலைப்பில் பயிலரங்கம் இன்று(30.3.2021) நடைபெற்றது.

இதில் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் காளிராஜ் தலைமை ஏற்று பயிலரங்கினை துவக்கி வைத்தார். கோவை ஐவியுக்தி வணிக தீர்வுகள் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் அருண்குமார் பயிலரங்க நிகழ்வில் முதன்மை உரை ஆற்றினார்.

துணை வேந்தர் காளிராஜ் தனது உரையில் கூறியதாவது:  நவீன உலகில், ஒவ்வொரு நாட்டின் வர்த்தகத்திலும் அறிவு சார் சொத்துரிமை குறிப்பிடத்தக்க பங்கை கொண்டுள்ளது. இந்த டிஜிட்டல் உலகில்,கண்டுபிடிப்பாளரின் அனுமதியின்றி ஆக்க பூர்வமான கருத்துக்கள் திருடப்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது. வலுவான அறிவுசார் சட்டங்களின் மூலம் அந்தந்த நாடுகளின் பொருளாதாரத்தில் ஒட்டு மொத்த பங்களிப்பை காக்க முடியும். அறிவுசார் சொத்து என்பது கண்டுபிடிப்பாளரின் சிந்தனையை எவராலும் விரைவாக நகலெடுக்கக் கூடிய அருவமான சொத்துக்களுக்கான பாதுகாப்பு ஆதாரங்களில் ஒன்றாகும். அறிவுசார் குற்றங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகின் ஒரு பகுதியாகவும் மாறிவிட்டன.என்று கூறினார்.