இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருந்த ஒரே தலைவர் ஸ்டாலின் – தயாநிதி மாறன் பேச்சு

கோவையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்தியமைச்சர் தயாநிதி மாறன் பல்வேறு இடங்களில் நேற்று (29.3.2021) பிரச்சாரம் மேற்கொண்டார்.

பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர், வரதராஜனைஆதரித்து நெகமத்திலும், கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து கிணத்துக்கடவு, சிட்கோ, ஆத்துபாலம் பகுதியிலும், தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து, செல்வபுரம், கரும்புகடை பகுதிகளிலும் தீவிர வாக்குசேகரித்தார்.

ஆத்துப்பாலம் பகுதியில் தயாநிதிமாறன் பேசுகையில்:

இந்து முஸ்லீம்களை பிரித்து, வெறுப்பு உணர்வை கொண்டு வந்து, அதன்மூலம்   இந்துக்களின் ஓட்டுகளை பெற்று விடலாம் என எண்ணுகின்றனர். எப்போதெல்லாம், சிறுபான்மையினரை ஒடுக்க நினைக்கின்றனரோ, அப்போதெல்லாம் மு.க.ஸ்டாலின் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்றும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருந்த ஒரே தலைவர் தளபதி ஸ்டாலின் என்றும் கூறினார்

திமுக ஆட்சி வந்தவுடன்,கலைஞர் பிறந்தநாளுக்கு ரூ .4 ஆயிரம்,  கேஸ்சுக்கு ரூ.100 மானியம், பெட்ரோல் டீசல் விலை  குறைக்கப்படும் என தளபதி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.

நம்ம வீட்டு பிள்ளைகள் மருத்துவராக ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரி கொண்டு  வரப்படும். மேலும் இந்த தேர்தல் நமக்கான தேர்தல் மட்டுமல்ல, நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற தேர்தல். எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து திமுகவை வெற்றி பெற வையுங்கள் என்றார்.