ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் தமிழர் திருவிழா

 

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக ‘தமிழர் திருவிழா – 2018’ இன்று (11.01.18) சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் கி.சித்ரா முன்னிலை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் கு.பாக்கியம் வரவேற்புரை வழங்கினார். பொங்கலுடன் துவங்கிய இவ்விழாவில் மாக்கோலம், ரங்கோலி, உறியடித்தல், விவாத மேடை, கிராமிய நடனம், ஓவியம், திருக்குறள், பழமொழி, கவிதை எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்களும், மாணவிகளும் கலந்து கொண்டனர்.