இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 01.01.2018ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு இன்று (10.01.2018) இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் த.ந.ஹரிஹரன் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.