ராமகிருஷ்ணா கல்லூரி கோவை ஒய்.எஸ். அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், கோவை ஒய்.எஸ்.அகாடமி  நிறுவனமும் இணைந்து சார்ட்டட்  அக்கவுன்டன்ட் கல்வி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (24.3.2021) இன்று கையெழுத்திட்டன.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லக்ஷ்மிநாராயணசுவாமி மற்றும் ஒய்.எஸ்.அகாடமி நிறுவனர்  பி.யோகேஷ்குமார்ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம்,   எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளிலும் வணிகவியல் மாணவர்களுக்கு சி.ஏ. எனப்படும் சார்ட்டட் அக்கவுன்டன்ட் தொடர்பான சிறப்பு வகுப்புகளை,     ஒய்.எஸ்.அகாடமி  நிறுவனம் மூலம் கல்லூரியிலேயே நடத்தப்படவுள்ளன.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார், வணிகவியல் புல முதன்மையர் ஜெ.சண்முகானந்தவடிவேல் ஆகியோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.