ஆட்டோ ஓட்டி ஆதரவு திரட்டும் வேட்பாளர் ஜெயராம்

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் கே.ஆர் ஜெயராம் பாப்பநாயக்கன் பாளையத்தில் இன்று (24.3.2021) பிரச்சாரம் மேற்கொண்டார்

ஒரு வார காலமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர் பீளமேடு சந்தையில் காய்கறி விற்று  மக்களிடையே பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில் இன்று பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட போது ஆட்டோ ஓட்டி மக்களிடையே ஆதரவு திரட்டினார். அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவை தெற்கு தொகுதியான தொண்டாமுத்தூரில் வேட்பாளர்களாக போட்டியிடும் கமலஹாசன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் ஆட்டோவில் பயணித்து மக்களை சந்தித்த நிலையில் தற்போது சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளரும் ஆட்டோ ஓட்டி பிரச்சாரம் மேற்கொண்டது அனைவரையும் கவர்ந்தது.