வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கப்படும் – சிங்காநல்லூர் திமுக வேட்பாளர்

சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் நா.கார்த்திக் ஹோப்ஸ் கல்லூரி, சிங்காநல்லூர் சாலை, மணீஸ் திரையரங்கு பகுதிகளில் இன்று (24.3.2021) வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின் போது அவர் பேசுகையில்:

சிங்காநல்லூர் தொகுதி முழுவதும் சிறு குறு தொழில் கூடங்கள் அதிகம் நிறைந்துள்ள பகுதி. இங்கு அமைந்துள்ள தொழிற் கூடங்கள் வளர்ச்சிக்கு அதிமுக அரசு, கடந்த 10 ஆண்டுகளில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதற்கு மாறாக ஜிஎஸ்டி வரி உயர்வு, மூலப்பொருட்களின் விலை உயர்வால் மிகவும் பாதிக்கப்பட்டு, தொழிற்கூடங்கள் மூடப்பட்டது.

சிறு குறு தொழிற்கூடங்களின் வளர்ச்சிக்கு, குறுந்தொழில் பேட்டை அமைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் நான் பேசியுள்ளேன் என்றும்,   என்னை வெற்றி பெற வைத்தால், திமுக ஆட்சி அமைந்தவுடன், அடுக்குமாடி குறுந்தொழில் பேட்டை அமைக்க  உறுதி கூறுகின்றேன் என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து அவர்,   திமுக ஆட்சியில், துவங்கப்பட்ட 400 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை திட்ட பணிகளை இவ்வளவு ஆண்டுகள் கடந்தும் அதிமுக அரசு முடிக்கவில்லை. இந்த மெத்தன போக்கோடு செயல்படும் இந்த அரசை அகற்ற வேண்டும். திமுக ஆட்சி அமைந்தவுடன், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கப்படும். மேலும் கொரோனா காலத்தில் வழங்க வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்த 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார்.