50க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் பா.ஜ.க.,வில் இணைந்தனர்

கோவை, ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வானதி சீனிவாசன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று உறுதிபட தெரிவித்ததை தொடர்ந்து அவரது ரசிகர்கள் பல்வேறு மாற்று கட்சிகளுக்கு சென்று வருகின்றனர். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில் ரஜினி ரசிகர்களின் ஆதரவு எந்த கட்சியினருக்கு என்று, தொடர்ந்து பல்வேறு கட்சியினர் இடையே போட்டிகள் நிலவி வருகிறது. இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பா.ஜ.க தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியினர் மற்றும் ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.