ரேஸ்கோர்ஸில் நடைபயிற்சி மேற்கொண்ட கமல்ஹாசன்

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று ரேஸ்கோர்ஸ், ராமநாதபுரம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரவிருக்கும் சட்ட சபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை அவர் நேற்று தாக்கல் செய்தார். பின்னர் ராஜ வீதியில் அவர் தனது பிரச்சாரத்தை துவங்கினார். தொடர்ந்து இன்று (16.3.2021) காலை ரேஸ்கோர்ஸ் பகுதியில் கமல்ஹாசன் நடைபயிற்சி மேற்கொண்டார். அங்கு வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார். பின்னர், ராமநாதபுரம் சாண்டோ சின்னப்பதேவர் திருமண மண்டபம் சென அவர் அங்கு அரை நிமிடம் சிலம்பம் சுற்றி பயிற்சி மேற்கொண்டார். அங்கு சிறுவர்களிடம் கலந்துரையாடிய பின்னர் அங்குள்ள பொதுமக்களிடமும் உரையாடினார்.