திமுகவின் அட்டகாசமான 500 வாக்குறுதிகள் : ஸ்டாலின் அறிவிப்பு

கோவை: திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை சனிக்கிழமை இன்று வெளியிட்டுள்ளார். 500 வாக்குறுதிகளில் முக்கிய வாக்குறுதிகளை இன்று ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில் முக்கிய அம்சங்கள் பின் வருமாறு:

*திருக்குறளை தேசிய நூலாக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்

*அதிமுக அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம்

*அனைத்து தொகுதிகளிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

*சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடி ஒலிபரப்பு

*பொங்கல் பண்டிகை பண்பாட்டு திருநாளாக கொண்டாடப்படும்

*கொரோனா பாதிப்பை சீரமைக்கும் வரை சொத்து வரி அதிகரிக்காது

*கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரிசி அட்டை குடும்பத்தாருக்கு ரூ.4000

*ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3  குறைக்கப்படும்

*பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும்.

*சமையல் சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைப்பு

*பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலைகள்

*மாதம் ஒரு முறை மின் கட்டணம்

*ரேஷன் கடைகளில் ஒரு கிலோ சர்கரை இலவசம்

*அரசு வேலையில் பெண்கள் இட ஒதுக்கீடு 40 சதவீதமாக ஆக்கப்படும்

*பணியின் போது உயிரிழக்கும் காவலர் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு

*கலைஞர் சிறப்பு வீட்டு வசதி திட்டம்

*கடல் நீரை குடி நீராக்கும் திட்டம்

*மலைப்பகுதிகளில் கேபிள் கார்

*கிராமப்புற பூசாரிகள் ஊதியம் ஓய்வூதியம் அதிகரிக்கப்படும்

*இந்து ஆலயங்களை புனரமைக்க ஆயிரம் கோடி ரூபாய், முஸ்லீம், கிறிஸ்துவ ஆலயங்களை புனரமைக்க 200 கோடி ரூபாய்

*வேலைக்காக காத்திருக்கும் அர்ச்சகர்களுக்கு பணி நியமனம்

*முதியோர் ஓய்வூதியம் 1500 ரூபாயாக அதிகரிக்கப்படும்

*கைம்பெண், மணமாகத பெண், இலங்கை அகதிகள் ஓய்வூதியம் 1500 ரூபாயாக வழங்கப்படும்.

*500 இடங்களில் கலைஞர் உணவகம்

*தமிழக ஆறுகள் பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்படும்

*மின்சார பேருந்துகள் மாநகராட்சியில் இயக்கப்படும்

*அரசு பணியாளர்கள் பணிக்காலத்தில் இறந்தால் ரூ.5 லட்சம் இழப்பீடு

*பத்திரிகையாளர், ஊடகவியலாளர்களுக்கு தனி ஆணையம், அவர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படும்

*நீட் தேர்வு ரத்துக்கு சட்டம் இயற்றப்படும்

*முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு பணியில் முன்னுரிமை

*5 ஆண்டில் 50 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

*காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். புதிதாக 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

*வேலை வாய்ப்பில் 75% தமிழர்களுக்கே என்ற வேலைவாய்ப்பு சட்டம் உருவாக்கப்படும்

*குறுந்தொழில் தொடங்க ரூ.20 லட்சம் வரை கடன்

*அரசு பணியில் உள்ள மகளீருக்கு 12 மாதம் பேருகால விடுமுறை

*மாணவர்களுக்கு இலவச டேட்டா, டேப்லட், கல்வி நிறுவனங்களில் வைபை வசதி செய்யப்படும்

*போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியம்

*உழவர் சந்தை அனைத்து நகரங்களுக்கும் விரிவு படுத்தப்படும்

*ரூ.2000 கோடியில் 200 தடுப்பணை

*சிறு வணிகருக்கு ரூ.15 ஆயிரம் வரை வட்டியில்லா கடன்

*கடன் சுமையை சீரமைக்க பொருளாதார மேல்மட்ட குழு அமைக்கப்படும்.

*ஜெ மரணம் விசாரணை அறிக்கை விரைவில் வழங்க வலியுறுத்தப்படும்

*மத்திய அரசு பள்ளி உட்பட அனைத்து பள்ளிகளிலும் 8ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்

*வேளாண் துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை

*இலங்கை படுகொலை விசாரிக்க வலியுறுத்தல்

*இலங்கை அகதிகள் இந்திய குடியுரிமைக்கு நடவடிக்கை

*மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள்

*மாணவிகளுக்கு இலவச நாப்கின்

*பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்

*மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு, கட்டணமில்லா பயண சலுகை, மூன்று சக்கர மோட்டார் வாகனம்

*குறிப்பிட்ட நகரங்களில் மெட்ரோ, புதிய விமான நிலையங்கள்

*பள்ளிகளில் காலையில் பால் வழங்கப்படும்

*கூட்டுறவு வங்கியில் 5 பவுன் உட்பட்ட நகை கடன் தள்ளுபடி

*30 வயதுக்குட்பட்டவர்களுக்கு கல்வி கடன் தள்ளுபடி

*மகளிருக்கு இலவச பேருந்து வசதி

உள்ளிட்ட சிறப்பம்சங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.