கோவையில் களமிறங்குகிறார் கமல்ஹாசன்-அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் உள்ள சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறதும். இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டுள்ளன. அதே நேரதத்தில் கூட்டணி மற்றும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் 10ம் தேதி அறிவித்ததை தெடர்ந்து இன்று இரண்டாம் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் கோவையில் தெற்கு சட்டமன்ற தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி அதிக வாக்குகளை பெற்றிருந்தது. அதனடிப்படையில், கமல்ஹாசன் கோவையில் களமிறங்குகிறார். கோவை தனக்கு பிடித்த ஊர் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கமல்ஹாசனுடன், அதிமுக-பா.ஜ.க கூட்டணி சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட உள்ளார். காங்கிர்ஸ் கட்சி சார்பில் மயூரா ஜெயக்குமார் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருந்த போதிலும் அக்கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.