திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் செயற்குழு கூட்டம் நேற்று திங்கள் கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

நூல் மற்றும் துணி சீராக கிடைக்கும் வரை, நூல் மற்றும் துணியின் ஏற்றுமதியை தற்காலிகமாக தடை செய்யவேண்டும் என பிரதமர் அலுவலகம், மத்திய ஜவுளி அமைச்சகம், மற்றும் வர்த்தக அமைச்சகத்திடம் கோரிக்கை வைப்பது.

மத்திய ஜவுளி அமைச்சரை நேரடியாக சந்தித்து  திருப்பூரின் இன்றைய தொழில் சூழ்நிலையை விளக்கி உடனே நடவடிக்கை எடுக்க கோருவது. இந்திய பருத்தி கழகத்திடம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த பருத்தியை கொள்முதல் விலையில் நூற்பாலைகளுக்கு தேவையான அளவு விற்க வேண்டும் என்றும், நிலைமை சீராகும் வரை வர்த்தகர்களுக்கு விற்கக்கூடாது என்றும் கோரிக்கை வைப்பது.

நூற்பாலை சங்கங்களுக்கு நூல் விலையை குறைக்க வேண்டும் என்றும் வேலையை அடிக்கடி உயர்த்தாமல் கட்டுக்குள் வைத்து மதம் ஒரு முறை மட்டுமே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைப்பது.

மேலும், மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டு, அனைத்து உற்பத்தியாளர்கள் சங்கங்களை நாளை (10.03.2021) புதன்கிழமையன்று அழைத்து அவர்களின் ஆதரவுடன், வரும் சனிக்கிழமையன்று, (13.03.2021) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.