இந்துஸ்தான் கல்லூரியில் உலக மகளிர் தினம்

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகளின் திறனை வெளிப்படுத்தும் நோக்கில், மார்ச் 1 முதல் 15 வரை பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றன.

இப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறும் மாணவிகளுக்கு இந்துஸ்தான் கல்வி நிறுவனத்தினர் பரிசுகளை வழங்கி சிறப்பிக்கின்றனர். உலக மகளிர் தினமான இன்று (8.3.2021) மகளிர் அதிகாரம் எனும் தலைப்பில் கருத்தரங்கத்தை நடத்தினர். இக்கருத்தரங்கத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக நாட்டியப்பேரொளி கருணாசாகரி, ஆடை அலங்கார நிபுணர் அபர்ணா சுங்கு ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினர். இவ்விழாவிற்கு இந்துஸ்தான் கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் தலைமைதாங்கினார். செயலர் பிரியா சதீஷ்பிரபு முன்னிலை வகித்தார். இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் முதன்மை செயல் அதிகாரி கருணாகரன், கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, கல்வியியல் கல்லூரியின் முதல்வர் செண்பக வள்ளி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.