மகளிர் தினவிழா கொண்டாட்டம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தினவிழா இன்று (08.03.2021) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குடும்ப நல ஆலோசகரும், சமூக செயற்பாட்டாளருமான டாக்டர் கோதன வல்லி கலந்துகொண்டு பேசுகையில் “பெண்கள் இச்சமூகத்தில் தனித்தன்மையோடு தங்கள் வாழ்க்கையில் உயர வேண்டுமானால் கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களை நாம் பாராட்டுவதோடு அவர்களின் சாதனைகளை இந்நாளில் அங்கீகரித்து போற்றப்படவேண்டும்” என்றார்.

இதில் ஓய்வு பெற்ற காவல்துறை பெண் ஆய்வாளர் ஜோதி மற்றும் மலையேற்ற பயிற்சியில் நிபுணத்துவம் பெற்ற சிவகாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளுக்கும் சுற்றுச்சூழலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வகையான மரக் கன்றுகள் வழங்கப்பட்டது.