ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கல்லூரியில் தேசிய அறிவியல் தினம்

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவியல் மன்றத்தின் சார்பாக தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை உணர்த்தும் வகையில் கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.

கட்டுரைப் போட்டிக்கு “கோவிட்-19 இயற்கையின் சுயசிகிச்சை முறை”, “அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்காக நீடித்த வளர்ச்சி” ஆகிய தலைப்புகளிலும், ஓவியப்போட்டிக்கு “குகை மனிதன் முதல் இன்றைய தொழில்நுட்ப மனிதன் வரை”, “சமையலில் அறிவியல்” மற்றும் “காலநிலை மாற்றம்” என்ற தலைப்புகளில் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களைக் கல்லூரி முதல்வர் சுப்பிரமணி பாராட்டி பரிசுகளை வழங்கினார். மேலும் தேசிய அறிவியல் தின நிகழ்வகளைக் கல்லூரி அறிவியல் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் உதவிப்பேராசிரியர் லெனின்பாரதி ஒரங்கிணைத்தார்.