குடிநீர் அபிவிருத்தி பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 6வது வார்டுக்குட்பட்ட லாலிரோடு பிரதான சாலை, அபாஸ்கார்டன் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியின் நீருந்து நிலையங்களுக்கு செல்லும் பிரதான குழையினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் கவுண்டபாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் ஆகிய பகுதிகளுக்கான குடிநீர் அபிவிருத்தி பணிகள் முடிக்கப்பட்டு மேற்கு மணடலம் 8வது வார்டுக்குட்பட்ட கவுண்டபாளையம் பகுதியில் குடிநீர் சீராக விநியோகிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இதில் மாநகரப்பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் சரவணக்குமார் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.