கோனியம்மன் தேரோட்டம் முன்னிட்டு கோவையில் போக்குவரத்து மாற்றம்!

கோவை: கோனியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோனியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வருகிற 13ம் தேதி மதியம் 2 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளதால் அன்று மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது

1.பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி சாலையிலிருந்து உக்கடம் வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சுங்கம் பைபாஸ், ரயில்வே மேம்பாலம், கிளாசிக் டவர் வழியாக செல்ல வேண்டிய இடங்கருக்கு செல்லலாம்.

2.அவிநாசி சாலை, திருச்சி சாலை பகுதியிலிருந்து வைசியாள் வீதி வழியாக செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் டவுன்ஹால், உக்கடம் சென்று பேருர் பைபாஸ் ரோடு வழியாக பேரூர் செல்ல வேண்டும்.

3.பேருரிலிருந்து செட்டி வீதி வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள் சலிவன் வீதி வழியாக காந்திபார்க் அடைந்து நகருக்கும், செல்ல வேண்டிய இடங்களுக்கும் செல்லலாம்.

4.ராஜ வீது, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி.வீதி சாலைகளில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை எந்த வாகனமும் நிறுத்த அனுமதி இல்லை. இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.