மதுரையிலிருந்து 2.35 மணிநேரத்தில் கோவைக்கு கொண்டுவரப்பட்ட உடல் உறுப்புகள்

சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்மணி (21வயது கேட்ரிங் மாணவன்) அவரது கல்லீரல் மதுரையிலிருந்து சாலை வழியாக கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு சுமார் 2.35 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில்  உள்ள  கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்க்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

இதுகுறித்து, கோவை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி அவர்கள் கூறுகையில், மதுரையிலிருந்து 2.35 மணி நேரத்தில் உறுப்பினை கொண்டு வருவது சாத்தியம் அல்ல. ஆனால்,  சாலை வழியாக உடல் உறுப்பினை கொண்டுவரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு மதுரை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்ட காவல்துறையினரின் சீரிய ஏற்பாட்டால் இது சாத்தியமாகி உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும், உடல் உறுப்புக்களைத் தானமாக தர முன்வந்த தமிழ்மணி குடும்பத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.