இந்துஸ்தான் கல்லூரியில் “தேசிய அறிவியல் தினம்” கொண்டாட்டம்

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிர்தொழில்நுட்பவியல் துறையின் சார்பில் “தேசிய அறிவியல் தினம்” கொண்டாடப்பட்டது.

கோவை நவஇந்தியவில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மத்திய அரசின் உயிரித்தொழில்நுட்பவியல் துறையின் ஸ்டார் கல்லூரி திட்டத்தின் கீழ் “தேசிய அறிவியல் தினம்” 26.2.2021 வெள்ளிக்கிழமையன்று கொண்டாடப்பட்டது. தேசிய அளவிலான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியினை இந்துஸ்தான் கல்வி நிறுவங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியாசதிஸ் பிரபு ஆகியோர் வாழ்த்தி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர்.

மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் விதமாக ஓவியம், வினாடி-வினா போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் ஆறு கல்லூரிகளில் இருந்து மொத்தம் 300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இப்போட்டிகளில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி கருணாகரன் ஆகியோர் ரொக்கப்பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் அளித்து கௌரவித்தனர்.