குதிரைகளுக்கான அணிவகுப்பு போட்டி: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்

கோவையில் குதிரைகளுக்கு இடையேயான அணிவகுப்பு போட்டியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.

நவ இந்தியாவில் குதிரைகளுக்கு இடையேயான அணிவகுப்பு போட்டிகள் 26ம் தேதி தொடங்கி வரும் ஞாயிறு வரை நடைபெறுகின்றது. இந்த போட்டியினை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று(25.2.2021) துவக்கி வைத்தார்.

அகில தமிழ்நாடு இண்டிஜீனியஸ் ஹார்ஸ் சொசைட்டி நடத்திய போட்டியில் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து குதிரைகள் வந்திருந்தன.

இதுகுறித்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சக்திபாலாஜி கூறுகையில், “தமிழகம், கர்நாடகா கேரளாவில் இருந்து 80க்கும் மேற்பட்ட குதிரைகள் கலந்து கொண்டன.

பால் பல் குதிரைகள், 2 பல் குதிரைகள், 4 பல் குதிரைகள் என்ற வகைப்படி போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளை மக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம். இந்திய வகை குதிரைகளான சிந்தி, மார்வாரி உள்ளிட்ட பல்வேறு ரக குதிரைகள் இங்கு வந்துள்ளன.” என்றார்.

இந்த நிகழ்ச்சியில், பயிற்சியாளர் சரவணன், அகில இந்திய இண்டிஜீனியஸ் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.