நதிகளிலே நீராடும் சூரியன்

கெளதம் மேனன், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சிம்பு கூட்டணியில் மீண்டும் ஒரு திரைப்படம். இந்த மூவரின் கூட்டணியில் 2010 ஆம் ஆண்டு உருவான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படமும், பாடலும் ரசிகர்களின் மத்தியில் இன்றும் கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன.

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தொடர்ச்சியாக கொரோனா பொது முடக்க காலத்தில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தை கெளதம் மேனன் வெளியிட்டார். இக்குறும்படமும் கார்த்திக், ஜெஸி ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தது.

இதைத் தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் உருவாக போகும் 3 வது படம் பற்றிய அறிவிப்பு சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3ம் தேதி வெளியானது. இப்படத்திற்கு பெயர் வைக்காத நிலையில் கெளதம் மேனன் பிறந்த நாளான நேற்று “நதிகளிலே நீராடும் சூரியன்” என்ற தலைப்பில் பெயர் வெளியிட்டனர். இத்தலைப்பு “காக்க காக்க” படத்தில் வெளிவரும் ‘ஒன்றா இரண்டா’ பாடலில் வரும் வரி என்பது குறிப்பிடத்தக்கது.