கோவை மாநகர காவல்  துணை ஆணையராக மயில்வாகனன் பொறுப்பேற்பு

தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி மாநிலம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் கோவை மாநகர தலைமையிட காவல் துணை ஆணையராக இருந்த குணசேகரன் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டார்.

அந்த இடத்திற்கு  மயில்வாகனன் நியமிக்கப்பட்டார். இந்த சூழலில், மயில்வாகனன் இன்று (26.2.2021)  மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்  கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதற்கு முன்  இவர் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்தார். மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இளைஞர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர்   என்பது குறிப்பிடத்தக்கது.