கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் ராணுவப்பயிற்சி முகாம்

ஒருங்கிணைந்த வருடாந்திர பயிற்சி முகாம் கற்பகம் உயா்கல்விக்கழகத்தில் பிப்ரவரி 23 அன்று தொடங்கி மூன்று நாட்கள் ராணுவப்பயிற்சி கூட்டுமுகாம் நடைபெற்றது.

தேசிய மாணவா் படையின் மூத்த மாணவா்களுக்கான மூன்று நாள் ஒருங்கிணைந்த வருடாந்திர பயிற்சியானது கற்பகம் உயா்கல்விக்கழகத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியானது கோவை என்சிசி (NCC) அமைப்பின் 2டிஎன் காம்போசிட் டெக்கனிகள் (2TN Composite Tenchnical) நிறுவனத்தின் கீழ் கா்னல் மானீஸ் சா்மா மற்றும் கேப்டன் ஈ.சங்கரன், டாக்டா் கே.டி.ஸ்ரீதா், டாக்டா் எஸ்.பாபு ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் உடற்பயிற்சி,  ஆயுதப்பயிற்சி, வரைபட வாசிப்பு, இந்திய ராணுவ வரலாறு, வாழ்வியல் திறன் மேம்பாடு, நோயற்ற வாழ்க்கைக்கான விழிப்புணா்வு மற்றும் சமூக செயல்பாடுகள் சார்ந்து பயிற்சியளிக்கப்பட்டது.

பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட பொது முடக்கத்திற்குப் பிறகு மாணவா்கள் மற்றும் தேசிய மாணவா்படை வீரா்கள் நேரடியாக கலந்துகொண்டு இப்பயிற்சி நடைபெற்றது.