புதிய நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை: புதிய நலத்திடங்களை பெற தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறையினர் விடுத்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கு புதிய நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த 78வது வாரிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசு அங்கீகாரம் பெற்ற தையற்பயிற்சி நிலையங்கள் தேர்ச்சி பெறும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு தையல் இயந்திரம் வாங்குவதற்கான உதவித்தொகை வழங்குதல், உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வுகள் எழுதும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பயிற்சி உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதில் பயனடைய தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த தகவல்களுக்கு 044-24321542/ 89397 82783 எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.