அகில இந்திய மக்கள் உரிமைகள் இயக்கத்தின் மாநில கெளரவ தலைவராக டி.கே.கார்த்திகேயன் நியமனம்

கோவை : அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில கெளரவ தலைவராக டெக்ஸ்சஸ் வெண்ச்சர்ஸின் (Texas Ventures) இயக்குநர் டி.கே.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆர்.கே.குமார் அவர்கள் மாநில கெளரவ தலைவருக்கான அடையாள அட்டையை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் இயக்கத்தின் துணை தலைவர்கள் ராஜசேகர், விஜயன் நாயர், தனவேந்திரன், பொது செயலாளர் வி.எச்.சுப்பிரமணியம், இணை செயலாளர்கள் கார்த்திக், விஜய்ராவ் மற்றும் அக்ஷித், பவுண்டேஷன் நிறுவனர் கே.கே.ரவி ஆகியோர் உடனிருந்தனர்.