கற்பகம் பல்கலைக்கழகத்தில் சிறப்புச் சொற்பொழி நிகழ்ச்சி

கோவை : கோவை ஈச்சனாரி பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள கற்பகம் பல்கலைக்கழகத்தில், உயர்கல்விக்கழகத் தமிழ்த்துறையின் சார்பில் உலக தாய்மொழி நாளை கொண்டாடும் வகையிலும், தமிழுணர்வையும், தாய்மொழிப் பற்றையும்  ஊக்குவிக்கும் விதமாகவும் சிறப்புச் சொற்பொழி நிகழ்ச்சியானது 19.2.2021 வெள்ளிக் கிழமை அன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில், தமிழ்ச்சான்றோர் விருதாளர் செந்தலை ந.கவுதமன் அவர்கள் கலந்துகொண்டு ‘செம்மொழியா நம்மொழி?’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.  மேலும், உலக தாய்மொழி நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.